தல அஜித் வலிமை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொள்ளும் புதிய புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்பொழுது துப்பாக்கியுடன் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தல அஜித் திரைப்படங்களில் நடிப்பது தவிர பைக் ரேஸ் மற்றும் துப்பாக்கி சூடு ஆகிய சில திறமைகளையும் கொண்டவர். தற்பொழுது இவர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு தற்பொழுது மொரோக்கோவில் நடைபெற்று வருகிறது.
போனிகபூரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், அஜித்தின் அண்மைய புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அஜித் சென்னையில் துப்பாக்கியுடன் உள்ளது போன்ற புகைப்படம் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருவதுடன், அஜித் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியிலும் உள்ளனர்.