Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழன் என்றால் இளக்காரமா…? மோடி அரசுக்கு மனசாட்சி இல்லையா… வைகோ ஆவேச பேச்சு…!!

தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார். 

மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்பாரதி போன்றோர் பங்கேற்றனர். அதில் வைகோ பேசியதாவது, “மோடி அரசே உனக்கு மனசாட்சியே இல்லையா? தமிழ்நாட்டின் மீனவர்கள் இந்திய நாட்டின் பிரஜை இல்லையா? தமிழன் என்றால் இளக்காரமா? குஜராத்தி என்றால் இப்படி விடுவாயா? சிங்கள அரசு 2 லட்சம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்துள்ளது.

கடந்த 40 வருடங்களில் 800 தமிழ்நாட்டு வீரர்களை கொலை செய்து தாண்டவம் ஆடுகிறது. மேலும் இந்திய நாட்டின் கடற்கரையே எங்கள் வரிப்பணத்தினால் இயங்கிவருகிறது. ஆனால் தமிழ்நாட்டு மீனவனை அது பாதுகாக்கவில்லை. மேலும் இந்திய அரசானது சிங்கள கடற்படை தளபதிகள் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்க ஆதரிக்கிறது. இனிமேல் சிங்களன் தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவதை தடுத்து நிறுத்தவில்லை என்றால், அதற்கு என்று தனிப்படையே தமிழ்நாட்டில் உருவாகும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |