தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் திமுக சார்பில் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது .
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் பஞ்சத்தை தமிழகம் தற்போது சந்தித்து வருகிறது. நிலவி வரும் இந்த கடும் தண்ணீர் பஞ்சத்தை சரிசெய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் இடதுசாரி இயக்கங்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் திமுக சார்பில் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய கோரியும் தண்ணீர் பஞ்சத்திற்கு முன் கூட்டியே நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியை கண்டித்தும், தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீரை விநியோகம் செய்வதை தடுக்கக் கோரியும் மாநகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகை செய்து போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு திமுக கோவை சட்டமன்ற உறுப்பினர் தலைமை வகித்தார் மேலும் ஏராளமான திமுக தொண்டர்களும் பொதுமக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்