Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு போயிட்டு வரும் வழியில்…. குடும்பத்தினருக்கு போன தூக்க செய்தி… மதுரையில் சோக சம்பவம் …!!

மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள தேனுரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். பாலசுப்பிரமணியன் தனது நண்பரான அழகர்சாமியுடன் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அரியூர் வழியே சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் அரியூர் அருகே இருசக்கரவாகனம் நிலைதடுமாறி மரத்தின் மீது மோதியது. இதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அழகர்சாமி படுகாயமடைந்து மயக்கமடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு பாலசுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அழகர்சாமி அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |