ஒரே வாரத்தில் இரண்டு சிறப்பு ரெயில்கள் தடம் புரண்டதால் தண்டவாளங்களை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு சரக்கு ரயிலானது புறப்பட்டு சென்றுள்ளது. இந்த சரக்கு ரயில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியிலுள்ள ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது, ரயிலின் 25வது மற்றும் 26ஆவது பெட்டிகளின் சக்கரங்கள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விட்டது. இந்நிலையில் திடீரென கேட்ட அந்த பயங்கர சத்தத்தால் என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தி விட்டார்.
இதனையடுத்து அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே ஜல்லி கற்களை ஏற்றி வந்த சரக்கு ரயிலானது அரக்கோணம் ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியிலுள்ள தண்டவாளங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.