ராமர் கோவிலுக்கு ராகுல் நிதி தந்தாலும் ஏற்போம் இன்று ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகி கூறியுள்ளார்.
ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டும் பணி அயோத்தியில் தொடங்கியுள்ளது. இதற்கு மக்களிடம் பல நூறு கோடி நிதி திரட்டியுள்ளனர். ராகுல், சோனியா நிதி தந்தாலும் பெற்றுக் கொள்வோம் என கோவில் அறக்கட்டளை நிர்வாகி கூறியுள்ளார்.
அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் அளித்த பேட்டியில், ” ஒட்டு மொத்தமாக, 70 ஏக்கர் பரப்பளவில், ராமர் கோவில் முழுவதையும் கட்டி முடிக்க 1,100 கோடி ரூபாய் செலவாகும். சில கார்ப்பரேட் நிறுவனங்கள் கோவிலை கட்டித் தர முன் வந்தது. அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டோம். மக்கள் அனைவரின் பங்களிப்புடன், கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்” என்றார்.