மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.
கலைத்துறையில் சிறந்து விளங்கியவர் மறைந்த பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம். இவர் ஏராளமான திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். இவருடைய பாடல்கள் சூழ்நிலைக்கு ஏற்றார் போல அனைவருடைய மனதையும் கவரும் விதமாக அமைந்திருக்கும். இந்நிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு மத்திய அரசு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பத்ம விபூஷண் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
எஸ்.பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட 7 பேருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விபூஷன் விருதை அறிவித்துள்ளது. மேலும் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே ,கர்நாடகாவின் பெல்லே, அமெரிக்காவின் நரேந்திர சிங் கபாணி, டெல்லியை சேர்ந்த மவுலானா வாஹித்துத்தின் கான், பி.பி லால், ஒடிசாவில் சுதர்சன் சாஹு ஆகியோருக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.