புதுக்கோட்டை விளையாட்டு அரங்கத்தில் உடற்தகுதி தேர்வுக்காக இளைஞர்களும் இளம்பெண்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக போலீஸ் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றுள்ளது. இந்த எழுத்து தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 12,345 பேர் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து உடல்தகுதி தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வு எழுதிய இளைஞர்கள், இளம் பெண்கள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வைத்து உடல் தகுதி தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற பயிற்சிகளை 100க்கும் மேற்பட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியை மேற்கொள்ளும் போது அவர்களுக்குள் போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியை கந்தசாமி, முத்துராமலிங்கம் ஆகிய பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். எழுத்துத் தேர்வின் முடிவுகள் வெளிவந்த பின்னர் உடற்தகுதி தேர்வு நாள் அறிவிக்கப்படும்.
இந்த பயிற்சி பெரும் அனைவரும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஷூ அணியாமல் வெறும் காலில் பயிற்சியை மேற் கொள்கின்றனர். போலீசாக வேண்டும் என்ற லட்சியத்தில் அவர்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர் என்பது இதிலிருந்து நன்கு தெரிய வருகிறது.