Categories
பல்சுவை

“குடியரசு தினம்” ஏற்பட்ட நன்மை என்ன தெரியுமா….? காலத்தை மாற்றி அமைத்த நாள்…!!

உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்.உனக்குத் தேவையான எல்லா வலிமையும் , உதவியும் உனக்குள்ளேயே கூடிக் கொண்டிருக்கின்றன இது சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகளில் ஒன்று. நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்கலாய் பிரித்து ஆண்டதால் தான் ஆங்கிலேயர் ஒற்றுமையின்மை காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர்.

இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையும் ஆகும். 300 ஆண்டுகள்  பிரிட்டிஷ்காரர்களிடம்  நாம் அடிமைகளாய் இருந்தோம் அந்த 300 ஆண்டுகளுக்கு  முன்பு நம் நாடு எப்படி இருந்தது , மன்னர்கள் பலர் ஆண்டனர்.மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று வாழ்ந்தனர். மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி அவன் வைத்ததே சட்டம் இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது.

மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவர் அவர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்க்கும் சிலரில்   வீரமும் துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவதும்  உண்டு. குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு , அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்பு சட்டம்.மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய  நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் தான் ஜனவரி 26 , 1950. இந்த நாள் பழங்காலத்தை மாற்றி அமைப்பதாக இருந்தது.

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |