சுதந்திர தினத்தை விட முக்கியமானது குடியரசு தினமாகும் . ஏனென்றால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆச்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்த தலைவரை நீக்கிவிட்டு , வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குடியரசு தினம் நாளை கொண்டாடும் வேளையில் நம்மில் எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவீதம் வரையிலான மக்களே உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர்.
காரணம் இவர்கள் மட்டுமே தங்களது வாக்குகளைத் தேர்தல்களின் பதிவு செய்கின்றனர். ஏனையோர் அந்த நாளை விடுமுறையாக கருதி உல்லாசமாக கழிப்பதிலேயே நாட்டம் காட்டுகின்றனர். தேர்தல்களை எவரெல்லாம் உதாசீன படுத்துகிறார்கள் என்று பார்ப்போமேயானால் கல்வி அறிவு கிடைக்க பெறாத , வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகள் அல்ல. மாறாக கற்றறிந்த சான்றோர் என்று பேச்சளவில் சொல்லிக்கொள்ளும் பணக்கார வர்க்கத்தினரே என்பது மிகவும் வேதனையான விஷயம்.
எல்லோரும் நம் கடமைகளை சரிவர செய்வோம் ஒருசொல் உன்னையும் என்னையும் இணைக்கும்மானால் , ஒரு சொல் ஜாதி , மதம் , இனம், மொழி கடந்த ஒன்றானால், ஒரு சொல் நம் சத்துருவிற்கும் சற்று பயம் வரும்மானால், ஒரு சொல் உலகமே கண்டு கொஞ்சம் வியக்கும்மானால் ,ஒரு சொல் சில இளைஞர்களின் சக்தி என்று இருக்குமேயானால், ஒருசொல் இயற்கை வளங்களின் இருப்பிடமாக இருக்கும்மானால், ஒரு சொல் இழிந்தாள் உடல் கொதிக்கும்மானால் ஒரு சொல் நம் ஒவ்வொருவருக்கும் பெருமிதம் என்றாள் அது இந்தியாவாக தான் இருக்கமுடியும் நான் இந்தியன் என்பதில் பெருமை அடைகிறேன்.ஜெய்ஹிந்த்