செயலற்ற புற்றுநோய் செல்களை கொண்ட நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். கொரோனா பரவாமல் இருப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தாலும், ஏதாவது ஒன்றின் மூலம் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் புதிய ஆய்வு ஒன்றில் சிகிச்சை பெறாத செயலற்ற புற்றுநோய் செல்களை உடையவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்கள் இழக்க நேரிடும் என முந்தைய ஆய்வுகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.