Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி…!!!

டெல்லியில் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசு தினமான இன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் டெல்லியில் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு மத்தியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதனையடுத்து பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Categories

Tech |