Categories
தேசிய செய்திகள்

வீட்டில் குடிப்பவர்களே… உஷாரு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மதுபானம் வைத்துக் கொள்ள கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும் என்பதை அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு வீடுகளில் மதுபானம் வைத்துக்கொள்ள லைசென்ஸ் பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. டெபாசிட் தொகையாக 50,000 மற்றும் ஆண்டுக்கு 12 ஆயிரத்தை செலுத்தி கலால் துறையில் உரிமம் பெற வேண்டும். ஒரு நபர் 6 லிட்டர் வரை லைசென்ஸ் இல்லாமல் மதுபானம் வாங்கலாம். அதை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் என்றால் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்.

இந்த புதிய அறிவிப்பு வீட்டில் அதிக அளவு மதுபானம் பதுக்கி வைத்துள்ளவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. சரியான உரிமம் பெறாமல் மதுபானம் பதுக்கி வைத்து சட்டவிரோத முறையில் விற்பனை செய்து வருவதால் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |