நாய் ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது உரிமையாளருக்காக மருத்துவமனையிலேயே காத்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் சென்ட்ராக்(68). இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ட்ராக் சம்பவத்தன்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போது அந்த வளர்ப்பு நாயும் பின்தொடர்ந்து சென்றுள்ளது. இதையடுத்து சென்ட்ராக்கின் வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்துள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை என்பதால் 6 நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்ததுள்ளது.
இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் நாயை விரட்ட தொடங்கினாலும், எதையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் ஒருவர் கூறுகையில், “நாயால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஒவ்வொருவருக்கும் அந்த நாயால் மகிழ்ச்சி ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்ட்ராக் சிகிச்சை முடிந்து சென்ற போது அவருக்காக காத்திருந்த நாய் தன்னுடைய வாலை ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
மனிதர்களைப் போன்று எங்களை நெருங்கி வாழ்கிறது என்று சென்ட்ராக் கூறியுள்ளார். இந்த உலகத்தில் தாய்க்கு நிகராக எதுவுமே கிடையாது. அந்த நபருக்கு தாய் இருந்தால் கூட இதுபோன்று பாசமாக இருந்திருப்பாரா? என்பது தெரியவில்லை. ஆனால் அவர் இந்த நாயை தாய்க்கு நிகராக வளர்த்ததால் அந்த அளவு கடந்த பாசத்தினால் 6 நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்து கிடைத்துள்ள சம்பவம் அனைவறிதேயும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.