Categories
மாநில செய்திகள்

“சட்ட மன்ற தேர்தல்” 1 இடத்தில் கூட வாய்ப்பில்லை…. பிஜேபி-க்கு சாபம் விட்ட முதல்வர்….!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற். இந்த  ஆலோசனை கூட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய நாராயணசாமி, “புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி மூன்று முறை வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் தற்போது திமுக கூட்டணி தொடர்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக தலைமை முடிவுக்கு நாம் கட்டுப்படுவோம்.

புதுச்சேரியில் ஒரு டுபாக்கூர் கட்சி உள்ளது. அதாவது பாஜக கட்சி உள்ளது. கிரண்பேடி மக்கள் நல திட்டங்களை தடுத்து நிறுத்தாமல் பாஜக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து வருகின்றனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது. பாஜகவை புதுச்சேரியில் இருந்து விரட்டி அடிப்போம். இதையடுத்து 26ஆம் தேதி டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காங்கிரஸ் சார்பாக டாக்டர் பேரணி நடைபெற உள்ளது.

மக்கள் நலத்திட்டங்களை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்துவது கிராம மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது. எனவே புதுச்சேரியில் கிரண்பேடி இருந்தால் நல்லது. ஏனெனில் அவரை பயன்படுத்தி தேர்தலில் நம்மால் எளிதில் வெற்றி பெற முடியும். நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாஜகவை புறக்கணிப்பார்கள். எனவே பாஜக கட்சி காணாமல் போய்விடும் என்று நாராயணசாமி ஆவேசமாக பேசியுள்ளார்.

Categories

Tech |