Categories
சினிமா தமிழ் சினிமா

“சட்டம் தன் கடமையை செய்யும்” நடிகர் சங்க தேர்தல் தடை குறித்து ராதாரவி கருத்து …!!

சட்டம் தன் கடமையை செய்யும் என்று நடிகர் சங்க தேர்தல் தடை குறித்து நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய படம்

 

இதையடுத்து பாண்டவர் அணியினர் சார்பாக நடிகர் விஷால் ,கருணாஸ் , பூச்சி முருகன் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை  சந்தித்து மனு அளித்தனர். இதை தொடர்ந்து திடீர் திருப்பமாக நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென் சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராதாரவி க்கான பட முடிவு

இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவி , விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாமே பொய் .சட்டம் தன் கடமையை செய்யும் . நீதி நேர்மை இருந்தால் தேர்தலை நிறுத்த வேண்டும் . இவர்கள் நல்லது எதுமே செய்யவில்லை. சரத்குமார் , விஜயகாந்த , நடிகர் திலகம் , புரட்சி தலைவர் மற்றும் என்னுடைய தலைமையில் என நாங்கள் நல்லது செய்தோம். இவர்கள் ஊழல் தான்  செய்தார்கள் என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |