கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் நோய் தொற்று பரவும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. ஆனால் சமூக வலைத்தளங்களில் இந்த தடுப்பூசி களுக்கு எதிரான வதந்திகள் பரவி வருகிறது. அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.