தமிழகத்தில் ஜனவரி 29ஆம் தேதி முதல் மீண்டும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், ஜனவரி 29ஆம் தேதி முதல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஜனவரி 29ஆம் தேதி முதல் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.