Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நண்பன் வீட்டுக்கு போன சுகுமார்…! வழியில் வந்த துக்க செய்தி… கண்ணீரில் மூழ்கிய குடுபத்தினர் …!!

லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி பகுதியைச் சார்ந்தவர் சுகுமார். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று தனது நண்பரை பார்க்க புதுப்பாடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர் புதுப்பாடியை கடந்து சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த லாரி திடீரென்று சுகுமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் சுகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆர்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |