சமீபத்தில் வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ள தனியுரிமை கொள்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளனர். பல வருடங்களாக வாட்ஸ் அப்பை பயன்படுத்தியவர்கள் அதை பயன்படுத்த முடியாமல், விடவும் முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் மூலம் உடனடியாக வாய்ஸ் மெசேஜை அனுப்பலாம். சிறந்த வீடியோ கால் லைவ் லொகேஷன் ஷேரிங் என பல அம்சங்கள் வாட்ஸப்பில் கிடைக்கின்றது.
இதில் லொகேஷன் செய்வதற்கு வாட்ஸ் அப் இல்லாமலும் ஷேர் செய்ய முடியும். வாட்ஸ்அப் இல்லாமல் கூகுள் மேப்பில் ஷேர் செய்வது எப்படி என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். கூகுள் மேப்பின் வலது மேல் மூலையில் உங்கள் ப்ரொஃபைல் படத்தை கிளிக் செய்யவும். லைவ் ஷேரிங் என ஆப்ஷன் இருக்கும், அதை கிளிக் செய்யவும். அதில் நீங்கள் யாருடன் பகிர விரும்புகிறவர்களும் அவர்களது ப்ரொஃபைல் ஐ கிளிக் செய்து ஷேர் செய்து கொள்ளலாம். இதில் நீங்கள் எவ்வளவு நேரத்திற்கு பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்யலாம் அல்லது உடனடியாக ஸ்டாப் கூட செய்ய முடியும்.