Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு – மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக 8 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதுவும் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த வகுப்புகள் நடைபெறுகிறது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி குறைந்த மணி நேரங்களே மாணவர்கள் பள்ளியில் பாடங்களை கற்க வழிகாட்டு நெறிமுறைகளில் படி அணுகப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் கல்வி கடந்த ஆண்டை காட்டிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு வர இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் மாணவர்கள் பொதுத்தேர்வு குறித்தான பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் பெற்றோர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். மாணவர்கள் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல் எளிய வகையில் தேர்வுகள் இருக்கும். பொதுத்தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் குறித்து தமிழக முதல்வரின் அனுமதி பெற்ற பிறகு அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

Categories

Tech |