அடுத்தவர் மனைவியை விரும்பினால் கருடபுராணத்தில் என்ன தண்டனை கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இறந்த பிறகு அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கமும், நரகமும் கிடைக்கும் என்று கருட புராணங்களில் கூறுவதுண்டு. அதில் என்னென்ன பாவங்கள் செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்று கருட புராணத்தை அடிப்படையாக வைத்து தெரிந்துகொள்ளலாம். கருட புராணம் இந்து மதத்தைப் பொறுத்தவரையில் சைவ மற்றும் வைணவ புராணங்களிலேயே மிக முக்கியமாக கருதப்படுவது தான் கருட புராணம். கருட புராணம் என்பது என்ன என்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.
பரம்பொருளாகிய விஷ்ணு பகவான் தன்னுடைய கருடவாகனத்தில் ஏறி உலகை வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய வாகனமான கருடன் திரும்பி விஷ்ணுவைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாராம். எம்பெருமானே மனிதர்களின் இறப்பிற்கு பிறகு என்னதான் நடக்கும் என்று கேட்டுள்ளார். கருடனின் கேள்விக்கு விஷ்ணு பகவான் சொன்ன பதில் கருட புராணம்.
கருட புராணம் சொல்வது என்ன:
விஷ்ணுவின் வாகனமான கருடனின் கேள்விக்கு விஷ்ணு பகவான் சொன்ன பதில் கருட புராணத்தில், மனிதன் இறந்த பிறகு அவர்களுடைய உடலில் இருந்து பிரிந்த உயிர் எங்கு செல்கிறது? என்ன செய்கிறது? சொர்க்க,ம் நகரம் போன்ற விஷயங்களும், சொர்க்கத்துக்கு யாரெல்லாம் போவார்?, நரகத்துக்கு யாரெல்லாம் போவார்கள்? என்று விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. உலக உயிர்களின் மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள், மறுபிறவி ஆகியவற்றை பற்றி தெளிவாக விளக்குகிறது.
அடுத்தவர் மனைவியை விரும்புபவர்களுக்கு:
அடுத்தவருடைய மனைவியை ஒருவர் விரும்புதல் அல்லது அபகரித்து செல்லுதல், அடுத்தவர்களுடைய குழந்தையை பறித்தல், மற்றவர்களை ஏமாற்றிப் பொருட்களை பறித்தல் போன்ற பாவங்களைச் செய்தவர்கள் மிகப்பெரிய குற்றமாக சொல்லப்படுகிறது. இந்த குற்றங்களை செய்தவர்கள் தண்டனைக்கு என்ன பெயர் என்ன தெரியுமா? தாமிஸர நரகம்.
தாமிஸர நரகம் என்றால் என்ன:
அடுத்தவர் மனைவியை விரும்புதல் அபகரித்தல் அடுத்தவர் குழந்தைகளைப் அழித்துக் கொள்ளுதல் மற்றவர்களுடைய பொருட்களை ஏமாற்றி வாங்குதல் போன்ற பாவங்களை செய்பவர்களை எமலோகத்தில் உள்ள எமதர்மனின் பணியாட்கள் மொத்தமாக சேர்ந்து பெரிய பெரிய முட்களான கட்டைகளால் அடித்து கொடுமைப் படுத்துவார்கள்.