Categories
மாநில செய்திகள்

3 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

திருப்பூர் அரசு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் திருப்பூர் முத்தூர் அரசுப் பள்ளிக்குச் சென்ற பிளஸ் டூ மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து கொரோனா உறுதியான 2 மாணவர்கள், ஒரு மாணவி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேரின் 3 வகுப்பறைகள் மட்டும் மூடப்பட்டு, வேறு வகுப்பறையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |