குடியரசு தினவிழாவில் பங்கேற்க மிகுந்த ஆவலுடன் இருந்ததாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்
இன்று நாடு முழுவதிலும் 72வது குடியரசு தினம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் உலக நாடுகளிலிருந்து முக்கிய தலைவர்கள் விழாவில் பங்கேற்பது வழக்கம். அவ்வகையில் இவ்வருடம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தினவிழாவில் பங்கேற்க இருந்தார். ஆனால் கொரோனா தொற்று பரவலின் காரணமாக போரிஸ் ஜான்சன் அவர்களால் நம் நாட்டிற்கு வருகை தர இயலவில்லை.
இதுகுறித்து காணொளி மூலம் பேசிய போரிஸ் ஜான்சன் கூறுகையில், “இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க மிகுந்த ஆவலுடன் இருந்தேன். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிகழ்ச்சியில் என்னால் பங்கேற்க முடியவில்லை. உலகின் மிகப்பெரிய இறையாண்மை கொண்ட ஜனநாயக நாடு என்றால் அது இந்தியா தான். நிச்சயமாக இந்த வருடத்தின் பிற்பகுதியில் நான் இந்தியாவிற்கு வருகை தருவேன். இந்திய மக்கள் அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.