ரயிலின் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் மக்கா நகர் 10வது தெருவில் அப்துல் அஜீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் மங்களத்திற்கு சென்றிருந்த போது, திடீரென செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சிறப்பு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து அப்துல்லின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் அப்துல் எந்த காரணத்திற்காக ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.