இன்றைய நவீன உலகில் இளைஞர்களை இதய நோய் அதிக அளவில் தாக்குவதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இன்றைய நவீன காலத்தில் 60 சதவீத இளைஞர்கள் இதய நோய் தாக்குவதாகவும், இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதிகரிக்கும் வேலை பளு, மன அழுத்தம், ஃபாஸ்ட் ஃபுட், உடற்பயிற்சி இல்லாமை போன்றவை காரணங்களால் இதய நோய் உருவாகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
இதனால் பெரும்பாலும் இளைஞர்கள் இதய நோய்க்கு ஆளாகிறார்கள் இதனை சரிசெய்ய தினமும் போதிய நடைபயிற்சி, உடற்பயிற்சி ,அன்றாட வாழ்வில் காய்கறிகள், கீரைகள், பழவகைகளை சேர்த்துக்கொள்ளுதல் அவசியம் என்று,ம் மன அழுத்தத்தை குறைத்தல் போன்ற காரணங்கள் இதய நோய் குறைய வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.