ஐரோப்பியர்களுக்கு சலுகை காட்டும் வாட்ஸ்அப் நிறுவனம், இந்திய பயனாளர்களை பாரபட்சமாக நடத்துகிறது என்று டெல்லி ஐகோர்ட்டில் குற்றம்சாட்டியுள்ளது.
வீடியோ, புகைப்படம், குறுஞ்செய்தி போன்றவற்றை பகிர்ந்து கொள்ள வாட்ஸ்அப் சமூக வலைதளம் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி வாட்ஸ் அப்பில் அனுப்பும் தகவல் பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொள்ளப்படும் என்ற புதிய விதிமுறையை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவந்தது. இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கணக்கு முடக்கப்படும் என்றும் அறிவித்தது. இந்தக் கொள்கை பயனாளர்களின் பாதுகாப்பில் குறுக்கிடும் செயல் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கிடையே வாட்ஸ்அப் இன் தனியுரிமைக் கொள்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வக்கீல் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. புதிய தனியுரிமைக் கொள்கையில் இந்தியாவை சேர்ந்த பயனாளர்களை வாட்ஸப் தன்னிச்சையாகவே உட்படுத்தி இருக்கிறது. அவர்களின் தரவுகள் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து இதர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஐரோப்பியர்கள் இந்த கொள்கையில் இருந்து விலகிக் கொள்ள வாய்ப்பு அளித்து உள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை இந்திய பயனாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இந்திய பயனாளர்களுக்கு பாரபட்சமாக நடத்துவதாக தெரிகிறது. இது பெரும் கவலை அளிக்கிறது.
இந்த விவகாரத்தை மத்திய அரசு ஏற்கனவே ஆய்வு செய்து வருகிறது. சில தகவல்களை கேட்டு வாட்ஸ்அப் க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தகவல்கள் வந்ததும் அதை சார்ந்து விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். அடுத்தகட்ட விசாரணை மார்ச் 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.