லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் குடியரசு தின விழாவை அணிவகுப்பு மேற்கொண்டு கொண்டாடினர்
நாடு முழுவதிலும் 72 ஆவது குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகரான டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்புகளை தொடங்கி வைத்தார்.
அதே போன்று அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிலையில் இந்தியா-திபெத் எல்லையிலும் ராணுவ வீரர்கள் குடியரசு தின விழாவை கொண்டாடி தேசியக் கொடியை கையில் ஏந்தி அணிவகுப்பு மேற்கொண்டனர்.