குழந்தை ஒன்று கைகளை சுத்தம் செய்வது போல ஆக்சன் காட்டும் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலக நாடுகள் பெரும் பொருளாதார சந்தித்து வருகின்றன. ஆனால் இந்த கொரோனா ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. என்னவென்றால் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஒரு பாடத்தை கற்று கொடுத்துள்ளது. இவற்றையெல்லாம் காலம் காலமாக நாம் கடைபிடித்து வந்திருந்தாலும் நாகரிகம் என்ற பெயரில் சமீபகாலமாக அனைத்தையும் மறந்து விட்டோம்.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கொரோனா வைரஸ் மீதிருந்த பயம் காரணமாக எங்கு சென்றாலும் கை, கால்களை சுத்தம் செய்வது, சானிடைசர் போட்டுக் கொள்வது என தவறாமல் செய்து வருகிறோம். இவ்வகையில் குழந்தை ஒன்று செல்லுமிடங்களில் இருக்கும் பொருட்களை எல்லாம் தொட்டு சானிடைசர் மிஷன் என்று நினைத்து கொண்டு அருகில் சென்று அடிக்கடி கைகளை சுத்தம் செய்து வருவது போல ஆக்சன் காட்டுவது பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
When your first year of life is 2020 was all about HAND SANITIZING 😂
— Bangdu ✨ (@AreyBangdu) January 21, 2021