63 வயதுள்ள முதியவர் ஒருவர் தன் 6 மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டு 7 ஆவதாக திருமணம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற பகுதியை சேர்ந்த 63 வயதுள்ள முதியவர் அய்யூப் தேகியா. இவருக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் 42 வயதுடைய பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தேகியா கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலயே தன் மனைவியை பிரிந்துள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம் அவரது மனைவியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதாவது தேகியா கூறியுள்ளதாவது, தன் மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ளவில்லை. மேலும் என் அருகில் தூங்குவதற்கும் விரும்பவில்லை. தனக்கு நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற நோய்கள் இருப்பதால் அவருக்கும் தொற்று நோய் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுவதாக கூறியுள்ளார். மேலும் உடலுறவு கொள்ள எனக்கு மனைவி வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ஏற்கனவே ஐந்து திருமணங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.இதில் தேகியாவின் முதல் மனைவி கிராமத்தில் வசித்துவருவதாகவும் அவருக்கு 20 முதல் 35 வயதுடைய 5 பிள்ளைகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான அவரது ஆறாவது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தேகியாவின் ஆறாவது மனைவி திருமணமான விதவை பெண்.
இதனால் தேகியா அவருக்கு நகைகள் மற்றும் பணம் நிறைய கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்வேன் என்று கூறி திருமணம் செய்திருக்கிறார். ஆனால் தேகியா தன் மனைவியை கடந்த டிசம்பர் மாதத்தில் அவரின் சகோதரியின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் அந்த பெண்ணை திரும்ப அழைத்து செல்லவில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனினும் தேகியா தன் மற்ற ஐந்து மனைவிகளையும் எதற்காக பிரிந்தார் என்பது குறித்த காரணத்தை தெரிவிக்கவில்லை.