Categories
தேசிய செய்திகள்

“பழைய ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டமா”… ரிசர்வ் வங்கி விளக்கம்..!!

பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

பழைய 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக தகவல் பரவி வந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு 1000, 500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அவற்றுக்கு பதிலாக 2,000ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. கடந்து 2018ஆம் ஆண்டு புதிய பொலிவுடன் கூடிய 10 ரூபாய் 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன.

2019 புதிய ஊதாநிற 100 ரூபாய் நோட்டுகள் வெளியாகியது. தற்போது புழக்கத்தில் இருக்கும் பழைய ஐந்து ரூபாய், பத்து ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி நேற்று விளக்கமளித்துள்ளது. வரும் மார்ச் அல்லது ஏப்ரல் முதல் பழைய ஐந்து ரூபாய், பத்து ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முந்திய சீரியல் எண் கொண்ட அனைத்து 100 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |