கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
வகுப்புகள் சரிவர நடைபெறாத காரணத்தினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடங்களை முடிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளும் நடைபெறவில்லை. இதனால் பொதுத்தேர்வை எதிர்க்கொள்ள மாணவர்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில், பொதுதேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்ப்பார்க்கும்படி இருக்கும். தேர்வுகள் எளிமையாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.