பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஒதியத்தூர் பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நூல் மில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே மில்லில் பணிபுரிந்து வரும் காட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வரும் ஸ்வஸ்திக் ராஜ் என்பவரை காதலித்துள்ளார்.
ஆனால் இவர்களின் காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி வட சென்னிமலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். அதன்பின் கெங்கவல்லி காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த இந்தக் காதல் ஜோடியின் பெற்றோர்களை போலீசார் வரவழைத்து இரு வீட்டாரிடமும் பேசி சமாதானம் செய்த பிறகு அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.