Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. மனைவியை பிரிந்த கணவன்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

பாதிக்கப்பட்டதால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் முருகேசன் என்ற மெக்கானிக் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகேயன் என்ற ஒரு மகன் இருக்கின்றான். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகேசனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதனால் மனமுடைந்த முருகேசன் தனது வீட்டின் குளியல் அறைக்கு சென்று உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சூரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |