மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வல்லூர் காலனியில் ரவிராஜா என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஐயப்பன் கோவில் மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தினால் படுகாயமடைந்த ரவிராஜாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரவிராஜா பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.