வன்முறைக்கும் விவசாயிகளுக்கும் தொடர்பு இல்லை என பாரத் கிஷான் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்
இன்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தனர் ஆனால் விவசாயிகள் மத்தியில் ஊடுருவிய மர்ம நபர்களினால் அமைதியான பேரணி வன்முறையாக வெடித்துள்ளது
இது குறித்து பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் கூறுகையில், “வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு விவசாயிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அரசியல் கட்சியின் போர்வையில் அவர்கள் இந்த டிராக்டர் பேரணியில் கலந்துகொண்டு வேண்டுமென்றே இப்படி போராட்டத்தை வன்முறையாக மாற்றியுள்ளனர்.
அவர்களை கண்டறியும் பணியை நாங்கள் தொடங்கியுள்ளோம். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து அவர்கள் யார் என்றும் எங்கிருந்து வந்தார்கள் என்பதையும் நாங்கள் சேகரித்து வருகிறோம். சரியான தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் அதனை காவல்துறையினரிடம் ஒப்படைப்போம். இந்த போராட்டம் தொடர்ந்து அமைதியான முறையில் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என விளக்கமளித்துள்ளார்.