நடிகர் சங்க தேர்தல் பணிகளை நிறுத்தஉள்ளதாக தேர்தல் ஆணையர் பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு சென்னை தென் மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து பாண்டவர் அணியினர் நீதிமன்றத்தை நாடி தேர்தலை நடத்த முயற்சி செய்ய உள்ளதாக கூறி இருந்தனர். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான பணிகளை நிறுத்தவுள்ளதாக நடிகர் சங்க தேர்தல் ஆணையர் பத்மநாபன் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.