மணல் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் பொட்டல் கிராமத்தில் உள்ள விதிகளை மீறி மணல் குவாரியில் மணல் அள்ளப்படுவதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டதை அடுத்து சேரன்மகாதேவி உதவி கலெக்டர் மணல் குவாரியில் திடீரென்று ஆய்வு நடத்தியுள்ளார். இதில் மணல் குவாரியின் உரிமையாளருக்கு ஒன்பதரை கோடி அபராதம் விதித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கல்லிடைகுறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ஒன்பது பேரை கைது செய்ததில் 8 பேரின் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இதில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நெல்லை மாவட்டத்தில் உள்ள பட்டபத்து பகுதியைச் சேர்ந்த செய்யது சமீர் என்பவரை கைது செய்து அவரை அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.