Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FlashNews: இன்டர்நெட் சேவை துண்டிப்பு – நாடு முழுவதும் பதற்றம் …!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரமடைவதை தடுக்கும் நோக்கில் இன்டர்நெட் துண்டிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகள் போராடும் பகுதியில், டெல்லியில் எல்லைப்பகுதியில் இணையதள சேவை நிறுத்தபட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறுஞ்செய்தி மூலமாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு தகவல் வெளியாகி வருகின்றது. ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது, காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள், விவசாயிகள் பெருமளவில் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் போன்ற பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும்,

இதனால் இந்த போராட்டம் என்பது மேலும் தீவிரமடைய கூடிய வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் சார்பில் விளக்கப்பட்டு இருக்கிறது. எனவே அதனை தடுக்கும் வகையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்ற கூடிய முக்கியமான பகுதிகளிலும், எல்லைப்பகுதிகள் இணையதள சேவை என்பது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு என்பது இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |