பிரான்சில் சிறுவன் ஒருவனை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 15 வயதுடைய யூரி க்ருச்செனிக் என்ற சிறுவனை 10 இளைஞர்கள் சேர்ந்து இரும்புக் கம்பி,கத்திபோன்றவற்றை பயன்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அச்சிறுவனின் மண்டை ஓடு உடைந்தது. மேலும் விலா எலும்பு, கைகள், கண்கள் என அனைத்து உறுப்புகளிலும் சிறுவனுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் தற்போது கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரான்ஸ் உக்ரைன் தூதர் வாடிம் ஒமேலச்செங்கோ இச்சம்பவத்தை யாராவது பார்த்திருந்தால் முன் வந்து சாட்சி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
https://youtu.be/TWq-IBaqVHQ