Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம்”… 4 மாணவர்கள் செய்த கொடூரம்… சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!!

மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை நான்கு மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவனுக்கு திடீரென்று வாந்தி, ஆசனவாய் மற்றும் ஆணுறுப்பு பகுதிகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால்  அச்சிறுவனின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் சிறுவனிடம் விசாரித்துள்ளனர். அதில் அச்சிறுவன் கூறியதை கேட்டு அவரின் தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது இந்த சிறுவனை அந்தப் பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுவர்கள் 4 பேர் கடந்த இரண்டு மாதங்களாக விளையாடுவதற்காக அழைத்துச் செல்வார்களாம். அதன்பிறகு அவர்கள் செல்போனில் ஆபாசமான படங்களை பார்த்து அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

மேலும் சிறுவனிடம் இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக அடித்து மிரட்டியுள்ளனர். இதனால் சிறுவன் பயந்து யாரிடமும் இது பற்றி கூறாமல் சித்ரவதையை அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவனுக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதால் அவரின் தாய் இதனை கண்டறிந்துள்ளார். அதன் பிறகு தன் மகனுடன் சங்கரன்கோவில் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதன்படி 17 வயதுக்குட்பட்ட அந்த நான்கு சிறுவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |