டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் மறு உத்தரவு வரும்வரை இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினமான இன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்கள் உடன் டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகிறார்கள். டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறத. இதனையடுத்து மறு உத்தரவு வரும்வரை இன்டர்நெட் சேவை துண்டிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களுக்கும் பரவி விடக்கூடாது என்பதற்காக இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.