காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக நீங்கள். காபி குடிப்பது நல்லதா? ஒரு நாளைக்கு எத்தனை முறை காப்பி குடிக்கலாம் என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
சில நிறுவனங்கள் வீணாகும் காப்பி கழிவுகளிலிருந்து ப்ரெட் , சாக்லெட் போன்றவற்றை உருவாக்குகின்றனர். முதன்முதலில் எத்தியோப்பியாவில் தான் காபி கடைகள் தொடங்கப்பட்டது. உறவுகளை இணைக்கும் பாலமாக காப்பி இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பொழுது விடியும் பொழுது ஒரு காப்பியோடு அன்றைய தினத்தை ஆரம்பித்தால் தான் நன்றாக இருக்கும் என்று பலரும் எண்ணுகின்றனர். அத்தகைய காப்பியை குடிப்பது நல்லதா? கெட்டதா? என்பதை குறித்து ஆய்வுகள் நடைபெறுகிறது.
காபியில் உள்ள முக்கிய மூலக்கூறான காஃபின் மருந்து வகையை சார்ந்தது. இதில் உள்ள முக்கிய மூலக்கூறாக காஃபிரின் மருந்து வகையை சார்ந்தது. இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் காபி குடிப்பது உடல் நலக்கோளாறு ஏற்படுத்தும். நாளொன்றுக்கு நான்கு முறைக்கு மேல் காபி குடிப்பது தவறானது. இதனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும்.
குறிப்பாக ஆண்களுக்கு புரோஸ்டேட் கேன்சரையும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதையும் குறைக்கிறது. நமது மூளையின் செயல்பாடாக நினைவாற்றல், சீரான மனநிலையை சரிசெய்யும் தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும்.
உடல் எடையை குறைக்க பெரும்பாலும் நாம் பிளாக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது. பால் மற்றும் வெள்ளை சர்க்கரை இல்லாமல் காபியை பருகும் போது, உடல் எடை நமக்கு குறையும். நம் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைகிறது.
பொதுவாக நாம் சோர்வாக இருக்கும் போது ஒரு கப் காபி குடித்தால் நன்றாக சுறுசுறுப்பாகி விடுவோம். காப்பி உடலின் தசைகளை வலிமை பெறச் செய்யும் என்பதால் உடற்பயிற்சிக்கு முன்பு இதனை பருகுவது நல்லது.
காலையில் காபி குடித்தால் தான் பலருக்கு காலை கடன் பிரச்சினை தீரும். ஆனால் அந்த கருத்து பொய்யானது. அதிகளவில் காபி குடித்தால் அஜீரணக் கோளாறு ஏற்படும். வயிற்றுப்போக்கு ஏற்படும்.
நீங்கள் காபி குடிப்பதற்கு முன் நீங்கள் குறிக்கும் காபி பொடி தரமானது தானா? என்பதை முதலில் பரிசோதிக்க வேண்டும். தற்போது காபிகளில் அதிக அளவில் நச்சுக்கள் கலந்துள்ளதால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் காபி பருகுவதை தவிர்க்க வேண்டும்.