35 வருடத்தில் பணத்தை சேமித்து எப்படி லட்சாதிபதி ஆகலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
தினசரி 30 ரூபாய் முதலீடு செய்து குறிப்பிட்ட காலத்தில் உங்களால் லட்சாதிபதி ஆக பணத்தை எப்படி சேமிப்பது என்பதை பார்க்கலாம். நம்மில் பலருக்கும் விரைவில் பணக்காரர் ஆகி விட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதற்கு சேமிப்பு என்பது மிக அவசியம். எனவே முதலீடு மற்றும் சேமிப்பின் முக்கியத்துவம் எல்லோருக்கும் தெரியும். சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போல மிகச் சிறிய தொகையை இப்போது சேமிக்கத் தொடங்கி விட்டால் மிகப்பெரிய தொகையை கடைசி காலத்தில் உங்களால் சம்பாதிக்க முடியும். நீங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்தால் தான் உங்களின் ஆசையை நிறைவேற்ற முடியும்.
எவ்வளவு சேமிக்க வேண்டும்?
இந்த இலக்கை அடைவதற்காக தொடர்ச்சியாக முதலீடு செய்ய வேண்டும். அதற்கு எஸ்ஐபி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். தினமும் 30 ரூபாய் சேமித்து வந்தால் உங்களுடைய ஓய்வு காலத்தில் பெரிய ஒரு தொகையை சம்பாதிக்க முடியும். உங்களுக்கு இருபது வயது என்று வைத்துக் கொண்டால் தினமும் 30 ரூபாய் சேமித்து வரும் போது 60வது வயதில் லட்சாதிபதி ஆகிவிட முடியும். தினமும் ரூ.30 எனும்போது, மாதத்துக்கு 900 ரூபாய் சேமித்தால் போதும். ஒரு வருடத்தில் சேமிப்புத் தொகை ரூ.10,800 சேமிக்க தொடங்கிய 40 வருடங்களில் ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் சேமிக்கலாம்.
லட்சாதிபதி எப்படி ஆகலாம்?
உங்களுக்கு இப்போது 30 வயது என்று வைத்துக் கொள்வோம். அடுத்த 35 வருடங்களில் உங்களால் லட்ச கணக்கில் சம்பாதிக்க முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் தினமும் 95 ரூபாய் சேமிக்க வேண்டும். மியூச்சுவல் திட்டத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு 12.5 சதவீத வட்டி கிடைக்கிறது. இதுவே டிவிடண்ட் ரீ-இன்வெஸ்ட்மெண்ட் பிளான் திட்டத்தில் முதலீடு செய்தால் 15 ரிட்டன் கிடைக்கிறது. இந்த முதலீட்டில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் 25 அல்லது 30 வருடங்களில் ஸ்மால் அல்லது மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து சம்பாதிக்கலாம்.