Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

இன்று பிறந்தநாள் காணும்…. ஓர் தமிழக நாயகன் விஜய் சங்கர்…!

திருநெல்வேலியில் பிறந்த இவர் சிறு வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டார். மேலும் விளையாடுவதற்கு பயிற்சி செய்வதற்காக வீட்டின் மாடியிலேயே அவரது தந்தை பயிற்சி செய்வதற்காக தனி இடத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். இவருடைய தந்தையும், இவரது சகோதரரும் கிரிக்கெட் வீரர் என்பதனால் விஜய் சங்கருக்கு எல்லாவிதத்திலும் அவரது குடும்பத்தினர் துணை நின்றனர்.

இவர் தற்போது மிகச்சிறந்த  வீரராக விளங்கினாலும் இந்திய ரசிகர்களிடம் அறிமுகமான நிலை என்னவென்றால் இவரால் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கும்என்பது போன்ற அறிமுகம்தான் அவருக்கு கிடைத்தது. அது எப்போது என்றால் நித்தாஷ் டிராபி, வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடிய விஜய் சங்கர் போட்டியின் இறுதி ஓவரில் இறுதி பந்து வரை சிறப்பாக விளையாடினார். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ஒரு சிக்ஸர் அடித்து இருந்தால் அதுதான் அவருடைய விளையாட்டு வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த போட்டியாக அமைந்திருக்கும். ஆனால் அவர் பதட்டத்தில் விளையாடி அவுட் ஆனதால் இந்திய ரசிகர்களின் மனதில் unfinisher ஆகத்தான் இருந்தார்.

இதெல்லாம் இருந்தாலும் ரசிகர்கள் விஜய் சங்கர் அவ்வளவுதான் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார், இனி அவருக்கு இந்திய அணியில் இடமே கிடையாது, அவர் இனி கிரிக்கெட்டை மறந்து விட வேண்டியதுதான் என்று அவருக்கு எதிராக பேசத் தொடங்கினார்கள். ஆனால் இந்திய அணி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கொடுத்தது தான் அவருடைய வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். 2019 ஜனவரி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களைப் பற்றி தவறாக பேசினார் என்று ஒரு சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்டவர்தான் விஜய் சங்கர்.

அந்தத் தொடரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. அப்போது ஐந்தாவது வீரராக களமிறங்கி கேப்டன் விராட் கோலியுடன் ஒரு மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் போட்டு 46 ரன்கள் எடுத்தார். மேலும் அவர் பவுலிங்கில் சிறப்பாக விளையாடினார். முக்கியமாக ஆஸ்திரேலிய அணி கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் எதிர்முனையில் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் ஆன மார்ச் டோனிக் 50 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அந்த கடைசி ஓவர் பும்ரா, முகமது சமி இரண்டு பேருக்குமே ஓவர் முடிந்துவிட்டதால் யாருக்கு அடுத்த ஓவர் கொடுக்கலாம் என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்தபோது கேப்டன் விராட் கோலி விஜய்சங்கரை  தேர்வு செய்தார்.

ஆனால் விராட் கோலியின் இந்த செயல் யாருக்குமே பிடிக்கவில்லை கமெண்டரி செய்தவர்களும் கூட இதை கிண்டல் செய்தார்கள். ஏன் கோலி  விஜய்சங்கரை  தேர்வு செய்தார். கேதர் ஜாதவ் எட்டு ஓவர் வீசி 33 ரன்கள் மட்டும் கொடுத்து  ஒரு விக்கெட் எடுத்துள்ளார். அவருக்கு கடைசி ஓவர் கொடுத்திருந்தால் அவர் கண்டிப்பாக கட்டுப்படுத்தியிருப்பார். ஆனால் விஜய் சங்கர் ஒரு ஓவரிலேயே 13 ஓவர்களில் விட்டுக் கொடுத்திருக்கிறார். அப்புறம் ஏன் விராட் கோலி தேர்வு செய்தார் என்று கமெண்டரியில்  விஜய் சங்கருக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

விஜய் சங்கருக்கு  பும்ரா ஆலோசனை கொடுக்க…. தல தோனி நீ போடு பாத்துக்கலாம் என்று சொல்வது மாதிரி தோனியின்  ஒரு பார்வை. இவற்றுக்கு இடையில் கடைசி ஓவரின் பரபரப்பில் பவுலிங் செய்த விஜய் சங்கர் முதல் பந்திலேயே மார்க் ஸ்டோனிக் விக்கெட்டை எடுத்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும் கடைசி விக்கெட்டான ஆடம் சம்பாவின் விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இதுதான் இந்திய அணி மற்றும் ரசிகர்களுக்கு விஜய்சங்கர் ஒரு மிகச்சிறந்த வீரர் என்று உலகறியச் செய்தது. இவரின்  இந்த வளர்ச்சியை இந்திய அணியின் தேர்வு குழுவும் கவனித்தது.

2019ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் மூன்றாவது வீரராக ரோகித் சர்மாவால் களமிறக்கப்பட்டு அதிலும்  சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணியில் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக பயன்படுத்தப்பட்டார். மேலும் இவருடைய சிறந்த ஆட்டத்தை கவனித்த இந்திய அணியின் உலக கோப்பை தேர்வு குழு அவரை 15 வீரர்கள் கொண்ட குழுவில் தேர்வு செய்தனர். இது அவருக்கு மட்டும் பெருமை அல்ல ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை தான் அப்படி பட்ட விஜய் சங்கர் இன்று ( 27ஆம் தேதி ) தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

Categories

Tech |