Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு – பள்ளிக்கல்வித்துறை மகிழ்ச்சி அறிவிப்பு…!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாவங்கி தொகுப்பை வடிவமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்து நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பபிற்கு பின்னர் கடந்த 19ஆம் தேதி அன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் குறைக்கபட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வினாவங்கி தொகுப்பை வடிவமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச கற்றல் கையேடும்  தயாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |