காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ராகுல் காந்திக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதை தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் ராகுல் காந்திக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர், “நல்ல நண்பராகிய ராகுல் காந்திக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆண்டுகள் அவர் மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
I wish my good friend @RahulGandhi a very happy birthday.
I wish you many more years of public service.
#HappyBirthdayRahulGandhi pic.twitter.com/5oQlNQU8Cz
— M.K.Stalin (@mkstalin) June 19, 2019