4 ஆண்டுகால சிறைவாசத்தில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவருடைய நான்கு ஆண்டு கால சிறை தண்டனை என்பது நாளையோடு நிறைவடைய இருக்கின்றது. இதற்கிடையே சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர்க்கு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை காலை அவர் விடுதலை செய்யப்படுகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் உள்ள சசிகலாவிடம் நாளை காலை 9 மணியளவில் அதிகாரிகள் கையெழுத்து பெறுகின்றனர். சிறைத்துறையின் நடைமுறைகள் முடிந்ததும் நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.