அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்பை அவரின் மனைவி மெலானியா மதிக்காமல் சென்ற காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோகமான வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு ஜோபைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் புளோரிடாவில் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா இருவரும் விமானத்திலிருந்து இறங்கி வந்தபோது அவர்களை புகைப்படம் எடுப்பதற்காக புகைப்படக்காரர்கள் சிலர் காத்திருந்தனர்.
If “I’m over it” were a person. pic.twitter.com/CLA8WucyXX
— The Lincoln Project (@ProjectLincoln) January 21, 2021
அப்போது கைகளை அசைத்து ட்ரம்ப் போஸ் கொடுத்துள்ளார். ஆனால் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்காமல் மெலனியா வேகமாக சென்றதால் தனியே நின்று புகைப்படத்திற்கு ட்ரம்ப் போஸ் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். தற்போது அந்த வீடியோவானது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ட்ரம்பை மெலனியா விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மெலனியாவால் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.