Categories
மாநில செய்திகள்

விவசாயிகளை மதிக்காமல்…. உதாசீனப்படுத்தும் மத்திய அரசு – ஸ்டாலின் குற்றசாட்டு…!!

போராடி வரும் விவசாயிகளை மதிக்காமல் மத்திய அரசு உதாசீனப்படுத்தி வருவதாக மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 62 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிராக்டர் பேரணி நடத்தி வந்த விவசாயிகள் போலீசாரின் தடுப்பை மீறி நுழைந்ததால், காவல்துறையினர் அவர்களின் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதால் போராட்ட களம் வன்முறை களமாக மாறியது. இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் வெகுண்டெழுந்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை மதிக்காமல் மத்திய அரசு உதாசீனப்படுத்தி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மூன்று வேளாண்  சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். பேச்சுவார்த்தை என்ற பெயரில் பாஜக அரசு நாள் கடத்தும் நாடகங்களை மட்டுமே நடத்தியது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எந்த நடவடிக்கைகளையும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |